புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படும் தேதியை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்துள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி வரை உள்ள பள்ளிகள் கடந்த 18-ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதனால் ஆன்லைன் வழியாக பள்ளி மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றன. தற்போது தொற்று பாதிப்பு குறையத் […]
