அமெரிக்காவில் பிரபல பாப் இசை பாடகர் ஆரன் கார்ட்டர் (34) மர்ம மரணம் அடைந்துள்ளார். பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் பாப் இசை குழுவுடன் ஒப்பந்தம் போட்டு பணியாற்றி வந்தவர் கார்ட்டர். இவர் கடந்த காலங்களில் மனநல பாதிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டில் ஆரன் கார்ட்டர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்து கிடந்துள்ளார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
