பிரபல பாடகர் தனது வீட்டு குளியல் தொட்டியில் பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆரன் கார்டன் என்பவர் பிரபல பாடகராவார். 34 வயதான இவர் Aaron’s Party” ஆல்பம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கலிபோர்னியா, லங்கா ஸ்டார் பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று காலை 10.58 மணிக்கு தன் வீட்டு குளியல் தொட்டியில் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் 1987 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி பிறந்தார். […]
