Categories
உலக செய்திகள்

கொரோனா இப்படி தான் பண்ணுது….! உலகுக்கே அமெரிக்க ஆய்வு தரும் புது தகவல்….!!

கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வு தகவலை அமெரிக்க தேசிய சுகாதார இயக்குனர் வெளியிட்டுள்ளார் கொரோனா தொற்று குறித்து பல நாடுகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு நோயாளியின் உடல் நிலைக்கு தகுந்தவாறு தொற்றின் தாக்கம் இருப்பது மருத்துவ நிபுணர்களை திணற வைத்து வருகின்றது. இதுகுறித்த ஆய்வு தகவல் ஒன்றை அமெரிக்காவின் தேசிய சுகாதார இயக்குனர் பிரான்சிஸ் தற்போது வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிக்கு தகுந்தாற்போல் தொற்று மாறுபட்டு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் சராசரி வெப்பநிலை 4.4℃ அளவிற்கு உயரும்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சாராரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனேவில் செயல்பட்டு வரும் இந்திய வெப்பமண்டல வானிலை அறிவியல் நிறுவனத்தின் ஒரு பிரிவான பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவின் சாரசரி வெப்பநிலை 1901 முதல் 2018 வரை 0.7 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்ததாகவும், இதற்கு பசுமை இல்ல வாயுக்கள் ஏற்படுத்திய விளைவே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1986 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்தால் இதுவும் வரும் தெரிஞ்சுக்கோங்க – ஆய்வில் தகவல் …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பியல் பிரச்சனைகள் இருக்குமென ஆய்வின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் பல விதமான அறிகுறிகளை காட்டுகின்றது. இதனையடுத்து அன்னல்ஸ் ஆஃ நியூரோலஜி என்ற இதழ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் பாதி பேர் தலைசுற்றல், விழிப்புணர்வு குறைதல், தலைவலி, வலிப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின்மை கோளாறுகள், தசைவலி போன்ற நரம்பியல் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு!

மேட்டூர் அணையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ள நிலையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12ம் தேதி காலை 10 மணிக்கு முதலமைச்சர் நேரில் சென்று அணையை திறக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் ஆட்சியர் ராமன், சார் ஆட்சியர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்கள் ஒத்துழைத்தால் நியூசிலாந்தை போல் சென்னையை கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற முடியும்: ஆர்.பி.உதயகுமார்!

சென்னை அயனாவரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தபின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” திருவிக நகரில் நோய் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், கொரோனா இல்லாத நியூசிலாந்து உருவானது போல் மக்கள் ஒத்துழைத்தால் சென்னையை மாற்ற முடியும் என தெரிவித்தார். அதேபோல, சென்னையில் தனிமனித இடைவெளி என்பது மிகவும் சவாலாக உள்ளது என தெரிவித்தார். இருப்பினும் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

100 லட்சம் குழந்தைகளுக்கு சிக்கல்…! வெளியான அதிர்ச்சி தகவல் …!!

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால், உலக அளவில் 10 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளன. இது குறித்து உலக உணவு திட்டத்தின் ஊட்டச்சத்து இயக்குநர் லாரன் லாண்டிஸ் கூறுகையில், “கரோனாவின் தாக்கம் உலகின் 10 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தள்ளக்கூடும். மோசமான ஊட்டச்சத்திலிருந்து ஏற்கனவே பலவீனமான உடல்களில் இந்த நோய்த் தொற்று பேரழிவை ஏற்படுத்தும். அதே நேரத்தில், தினசரி […]

Categories
உலக செய்திகள்

“வாயை மூடி பேசவும்” பேசினால் பரவும் கொரோனா – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பேசும் பொழுது வெளிவரும் நீர்துளிகளினால் கொரோனா பரவும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும்பொழுது தொற்று பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ப்ரோஸ்ட்டிங் இதழில் வெளிவந்துள்ளது. நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நபர் பெட்டியின் உள்ளே இருபத்தி ஐந்து வினாடிகள் ஆரோக்கியமாக இருங்கள் என சத்தமாக மீண்டும் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை திருமழிசை காய்கறி சந்தையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. திடீர் ஆய்வு!

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் மே 11ம் தேதி திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.தற்காலிகமாக 200 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சமூக பரவலாக மாறுகிறதா? நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு: ICMR

கொரோனா தீவிர பரவல் குறித்து நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த ஐசிஎம்ஆர் முடிவெழுத்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சென்னை, சென்னை கோவையில் சோதனை நடத்த ICMR திட்டமிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் 24,000 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 49வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு 2 மருந்துகள் தயார் …! போட்டி போட்டு கொண்டு நடைபெறும் ஆராய்ச்சி …!

அமெரிக்க நிறுவனமும் இத்தாலியை சேர்ந்த நிறுவனமும் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது சீனாவில் தொடங்கி உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பு மருந்தை கண்டறியும் பணி பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றது. வைரஸ்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில், ஜெர்மனியின் பயான்டெக் மற்றும் அமெரிக்காவின் பைசர் இணைந்து ஆர்என்ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

உஷாரா இருங்க… ஸ்மார்ட்போன் கொரோனாவை பரப்பலாம்.. எச்சரிக்கும் ஆய்வாளர்!

ஸ்மார்ட் போன்கள் கொரோனாவை பரப்பும் கருவியாக விளங்குகிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். Bond பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிரிகள் அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வை மேற்கொண்ட Dr. Tajouri  இதுகுறித்து கூறுகையில் “80% நோய்க்கிருமிகள் ஸ்மார்ட் போன்கள் மூலமாக பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோன்று ஒரு நோயில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள கை கழுவும் பொழுது ஸ்மார்ட் போன்களையும் முறையாக தூய்மைப்படுத்துவது அவசியம். சமூகத்தில் கொரோனா தொற்று விரைவாக பரவுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

வெப்பம் அதிகரிக்க… கொரோனா குறைகிறதா?.. ஆய்வில் வெளியான தகவல்!

வெப்பநிலை அதிகரிப்புக்கும் கொரோனா பரவல் குறைவிற்கும் 85% வலுவான தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது நாக்பூரில் இருக்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதிலும் சராசரி வெப்பநிலை அதிகரித்தது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொற்று பரவுவது குறைந்திருப்பது போன்றவற்றிற்கு இடையே 85% தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். கணித மாதிரி ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது தான் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு தொகுதி ஆய்வகம் நீரி. கொரோனா பாதிப்பு புள்ளி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியாது… “வருடந்தோறும் வரலாம்”: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொரோனாவை வைரஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாது என்றும் ஃப்ளு போன்று இந்த தொற்று நோய் அடிக்கடி வரும் எனவும் சீனா மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்திருக்கும் என சீனாவின் நோய் கிருமி ஆய்வு கழக இயக்குனர் ஜின்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சார்ஸ் வைரஸோடு ஒப்பிடும் பொது கொரோனா மிகவும் கொடிய வைரஸ் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அறிகுறி எதுவும் இல்லாமல் இந்த வைரஸ் பரவுவதால் மிக பெய்ய […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு முதல்வருடன் ஆலோசனை..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து மத்தியக்குழுவிடம் அறிக்கை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் இருப்பதால், இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்தது. தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளா் வி.திருப்புகழ் தலைமையிலான அக்குழுவில் டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையின் டாக்டா் அனிதா கோகா், தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் 38,000-ஆக அதிகரிக்க வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,000 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பெங்களுருவில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி கழகம், இந்திய அறிவியல் நிறுவனம் மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் புனேவில் உள்ள ராணவத்திற்கான மருத்துவக்கல்லூரி ஆகியவை இணைந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்த தரவு இத்தாலி மற்றும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததன் விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்டு…”1,800 பயங்கரவாதிகள்”…. பாதுகாக்கும் பாகிஸ்தான் …!!

மும்பையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உட்பட 1800 பேரை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு விலக்கியுள்ளது  சர்வதேச அளவிலான பயங்கரவாத செயல்பாடுகளை தடுக்கும் அமைப்புகளில் ஒன்றான எஃப்.ஏ.டி.எஃப். சமீபத்தில் பாகிஸ்தான் அரசு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை  ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வில் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கண்காணிக்கப்பட்டு வரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்திற்கும் அதிகமாக கணக்கிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவை தடுத்த அரசு… மம்தா பானர்ஜிக்கு உள்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஷாக்…! ”உள்ளே நுழையக் கூடாது” சீனா திமிர் பேச்சு …..!!

வூஹானுக்கு சென்று அமெரிக்க குழு ஆய்வு நடத்த டிரம்ப்  கோரிக்கை விடுத்ததை சீன அரசு நிராகரித்துள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. வூஹானில்  இருக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என டிரம்ப் கூறினார். அவரது கருத்திற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியிருப்பதாவது, “வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை…. ”நாங்க பரப்பவில்லை” அமெரிக்காவுக்கு சீனா பதிலடி …!!

கொரோனா தொற்று எங்களிடம் இருந்து வரவில்லை என வூஹான் ஆய்வக அதிகாரி தெரிவித்துள்ளார்  உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் […]

Categories
மாநில செய்திகள்

நீரிழிவு நோயின் தாக்கம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!!

தமிழக கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்காட்லாந் ட்ராண்டி பல்கலைக்கழகமும், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையமும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 4.9 %லிருந்து 3.5 % அதிகரித்துள்ளது. கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. […]

Categories

Tech |