செவ்வாய் கிரகத்தில் -100 டிகிரி குளிரில், சீன நாட்டின் ரோவர் விண்கலமானது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2020ஆம் வருடம் ஜூலை மாதம் செவ்வாய்கிரகத்திற்கு முதன்முறையாக தியான்வென்-ஒன் எனும் விண்கலத்தை அந்நாடு தனியாக அனுப்பியது. அத்துடன் அனுப்பப்பட்ட ஜீரோங் ரோவர் விண்கலம், 350 தினங்களுக்கு மேலாக செவ்வாய் கிரகத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இப்போது அங்கு குளிர்காலம் என்பதால் நண்பகலில் -20 டிகிரி குளிரும், நள்ளிரவில் […]
