உருமாறிய புதிய கொரோனா எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனோ சாதாரண கொரோனாவைவிட 70% வீரியம் மிக்கது. மேலும் இந்த கொரோனோ வேகமாக பரவுவதற்கு, மனிதனின் தொண்டையிலேயே வேகமாக இனப்பெருக்கம் செய்து வருவது தான் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன் படி உருமாற்றம் பெற்ற இந்த கொரோனோ நோயாளிகளின் மூக்கிலும், தொண்டையிலும் […]
