மீன் விற்பனை நிலையங்களில் திடீரென நடந்த ஆய்வில் 10 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் நகரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆனந்தன், கந்தசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆத்தோர வீதி, வர்ண தீர்த்தம், திரு.வி.க. நகர் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஆய்வில் கடைகளில் கெட்டுப்போன மீன்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கெட்டுப்போன […]
