தடுப்பு மருந்து கொடுத்தாலும் அமெரிக்காவில் பலி எண்ணிக்கையை குறைக்க முடியாது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பாதிப்பிலிருந்து பெரும்பாலான உலக நாடுகள் மீண்டும் வருகின்ற நிலையில் அமெரிக்காவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் அமெரிக்காவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளன. அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளும் 2500-க்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன. […]
