பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டதால் குடிமகன்கள் வியப்படைந்தனர். தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வழிபாடு நடைபெற்றது. அங்கு தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தொழிலாளர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையில் வாழை மரம் மற்றும் மாவிலை கட்டி , மாலை அணிவித்து வழிபட்டனர். அதோடு மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டினர் […]
