உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்காக இஸ்தான்புல்லில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தீர்மானத்தில் உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிவ் உள்ளிட்ட நகரங்களில் தனது தாக்குதலை குறைப்பதாக ரஷ்யா தெரிவித்தது. இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷ்யா தலைநகர் அருகே தனது தாக்குதலை அதிகப்படுத்தியது.இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது […]
