ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் வழங்கிய ஆயுதங்களுக்கு ஆன செலவு தொகை வெளியாகியிருக்கிறது. ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் ஐந்து மாதங்களாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் ராணுவ உதவிகளை அளித்து கொண்டிருக்கிறது. எனினும், தங்களுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குமாறு உக்ரைன் அதிபர் உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் நேட்டோ நாடுகளிடம் நவீன ஆயுதங்களை தங்களுக்கு வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். […]
