Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. தூய்மைப்படுத்தும் பணியில் அதிகாரிகள்…. ஆய்வு செய்த அலுவலர்….!!

உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு பெட்டிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு படப்பையில் இருக்கும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப் பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பணிகளை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து இருப்பில் இருக்கும் 1, 776 பெட்டிகளில் 50 சதவீதத்துக்கும் மேலாக தூய்மை பணி நடைபெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கலைவாணர் அரங்கில்… ஆயத்தப் பணிகள் தீவிரம்…!!

சட்டப்பேரவைக் குழு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க இருப்பதால் அங்கு ஆயத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து வருகின்ற 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கலைவாணர் அரங்கத்தின் மூன்றாம் தளத்தில் 12,000 சதுரஅடி பரப்பளவில் பேரவைக் கூட்டத்திற்கான அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்சியின் எம்எல்ஏக்கள் அமர, 6 அடி இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. சபாநாயகர், முதலமைச்சர், […]

Categories
மாவட்ட செய்திகள்

தேனியில் முதல் போக நெல் நடவுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரம்…!

தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் நடவுக்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் முதல் போக நெல் நடவுக்கு ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. கூடலூர், கம்பம், சின்னமனூர், குச்சனூர், கோட்டூர்,வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உழுதல், வரப்பு சீர் அமைத்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடவுக்குத் தயாராகி வரும் நெல் நாற்றுகளை இன்னும் இரண்டு வாரங்களில் […]

Categories

Tech |