ஆம்பன் புயல் காரணமாக சென்னையில் அலைகள் உயரமாக எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மெரினா, கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினம்பாக்கத்தில் வழக்கத்தை விட உயரமாக அலைகள் எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. ஆம்பன் புயல் காரணமாக இரவு முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் விடாமல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், […]
