பிரிட்டனில் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்தவருக்கு ஆப்பிள் ஐபோன் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனிலுள்ள Twickenham என்ற பகுதியில் இருக்கும் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை நிக் ஜேம்ஸ் என்ற 50 வயதுடைய நபர் ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு கடைக்கு ஆப்பிள் பழங்களை வாங்கிச் சென்ற போது, கடையில் இருந்த ஊழியர்கள் உங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்கள். இதனால் ஏதோ ஒரு இனிப்பு வைத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு பையை பார்த்தவர் […]
