காபூல் நகரில் உள்ள ஒரு மசூதியின் வாசலில் தலிபான்களை குறிவைத்து குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித் என்பவர், தன் தாயின் நினைவு நாள் வழிபாட்டிற்காக ஈத்கா மசூதிக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று மசூதி வாசலில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். இக்கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தாக்குதலில் தலீபான்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை […]
