விருதுநகர் மாவட்டத்தில் செல்போன் மூலமாக சகோதரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை சகோதரர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன் புத்தூர் பகுதியில் 27 வயதுடைய கூலித்தொழிலாளி ரவிக்குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் சகோதரிக்கு செல்போனில் ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைப் பற்றி அறிந்த செந்தில், ரவிக்குமாரை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் ரவிக்குமார் தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் […]
