சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கிய சினிமா கம்பெனியில் இளம்பெண்களை நடிகையாக்குவதாக கூறி ஆபாசமாக படங்கள் வீடியோக்கள் எடுத்ததாக சேலம் மாவட்ட இடைப்பாடி சேர்ந்த இயக்குனர் வேல் சத்ரியன் அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி போன்றோரை சூரமங்கலம் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அந்த சினிமா கம்பெனியில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் அதிர்ச்சி தரும் விதமாக 30 ற்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள், கணினி, லேப்டாப், கேமரா, பென் ட்ரைவ் போன்றவை சிக்கியுள்ளது. […]
