சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் பகுதியில் அசோக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பா.ஜ.க. ஒன்றிய பொது செயலாளராக இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமியை அசோக்குமார் தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காண்பித்து மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த […]
