Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிப்பு…. கண்காணிக்க குழு அமைப்பு…. சற்றுமுன் அதிரடி….!!!!

பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் அளித்து வருகின்றனர். பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக அளிக்கும் இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக அதனை கண்காணிக்க தர உறுதி குழு நியமனம் செய்யப்படும் என்றும் தேவையற்ற வகையில் மக்களை துன்புறுத்தும் போக்குகளை தவிர்க்க தர உறுதி பிரிவு உருவாக்கப்படும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சித்திக் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை தொடக்கம்…!

முதுகலைப் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 25ஆம் தேதி முதல் தொடக்கம்…! சென்னை பல்கலைக்கழகத்தில் 2020-2021 ம் கல்வி ஆண்டின் மாணவர்கள் சேர்க்கை பற்றிய செய்திக்குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில், “சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான  2020-2021ம் கல்வி ஆண்டின், மாணவர்கள் சேர்க்கை மே மாதம் 25 ம் தேதி முதல் www.unom.ac.in எனும் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளன.

Categories

Tech |