தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது இளம் தலைமுறைக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதோடு இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்ற கருத்தையும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். விபிஎன் செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாணவர்கள் – இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு […]
