டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் சந்தேகத்திற்குரிய செயலிகள் மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது, டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் சந்தேகத்திற்குரிய செயலிகள்(ஆப்ஸ்) மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து செயல்படும் இந்த செயலிகள், இந்தியாவில் சில நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆப் மூலம் கடன் வாங்குபவர்கள், பணத்தை திருப்பிச் செலுத்த துன்புறுத்தப்படுகிறார்கள் மற்றும் இந்த செயலிகளால் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. […]
