கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது கவலை மனதில் இருந்துக்கொண்டே இருக்கும். மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக சென்று வரவேண்டும். ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். […]
