மீன ராசி அன்பர்களே…! இன்று புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் மிகுந்து காணப்படும். பெற்றோரின்ஆரோகியத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பரிசு திட்டங்களை அறிவிக்க வேண்டும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்னைகள் தீரும். எதிர்பாராத பண வரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் பிறக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அவ்வப்போது சிறியதாக கோபம் தலைதூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் கூடுமானவரை அன்பாக பேசுங்கள். […]