ஆண்டிபயோடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துவது குடல் புற்றுநோய் (குடல் – மலக்குடல் புற்று நோய்கள்) வரும் ஆபத்தை 50 சதவீதம் அதிகரிக்கிறது. ஸ்காட்லாந்தில் குடல் புற்றுநோய் பாதித்த 8 ஆயிரம் பேரிடம் நடந்த தொடர் ஆய்வில் இது உறுதியானது. இதுதவிர ஜங்க் உணவுகள், இனிப்பு மென்பானங்கள், மது, உடல் பருமன் அதிகரிப்பு ஆகியவையும் குடல் புற்றுநோய்க்கு காரணமாக உள்ளன. ஆகவே முடிந்த வரையில் ஆன்டிபயோடிக் மருந்து பயன்பாட்டை குறைப்பது மிகவும் நல்லது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
