தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்திலுள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா சென்ற 3ஆம் தேதி துவங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியானது நடந்தது. இதையடுத்து மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. அதன்பின் திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நால்வர் திருவீதி உலாவும், அபிஷேக பொருட்கள் வரிசை அழைப்பும் நடந்தது. பின் […]
