அரியவகை ஆந்தையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரைசந்தல் கிராமத்தில் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வேலியில் சிக்கி பறக்க முடியாமல் ஆந்தை ஒன்று தவித்து கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் படுகாயம் அடைந்த அந்த ஆந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனப்பகுதியில் […]
