Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 9,652 பேருக்கு கொரோனா… ஆந்திர மக்கள் அச்சம்…!!!

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,652 பேருக்கு ஒரு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம் மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,06,261 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

மனிதத் தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட கொடூர சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரெல்லி சாலையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனது வீட்டின் அருகே இடுக்கில் ஒரு கோணிப்பை இருப்பதை பார்த்துள்ளார். அதனை பிரித்து பார்த்தபோது அதில் மனித தலை இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின்னர் அதே இடத்தில் அந்த கோணிப் பையை வைத்துவிட்டு, தனது வீட்டிலிருந்து கவனித்துள்ளார். அப்போது அருகே உள்ள பாழடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில்… கொரோனாவுக்கு பலியான பெண்… அடக்கம் செய்த எம்எல்ஏ…!!

கொரோனாக்கு பலியான பெண்ணின் உடலை எம்எல்ஏ அடக்கம் செய்தார்.  திருப்பதியில் கொரோனாக்கு ஒரு பெண் பலியானார். அவரின் உடலுக்கு திருப்பதி கோவிந்ததாமத்தில் இறுதிச்சடங்கை திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டி மேற்கொண்டு நடத்தி வைத்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் கிரிஷா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றும்போது, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு கவச உடையணிந்து, பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றார்கள். கோவிந்ததாமத்தில் உடலை இறக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

சொத்து தகராறு…. பெற்ற மகனை கொன்ற கொடூர தந்தை…. போலீஸ் விசாரணை …!!

திருப்பதியில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி மண்டலம், சின்னமுஷிடிவாட சத்யநகரில் வாழ்ந்து வருபவர் 72 வயதான போரிபதி வீரராஜு. இவர் கடற்படையில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். அதன்பின் இவர் தனது 3 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தார். மகன் ஜலராஜு மருமகள் ஈஸ்வரி ஆகியோருடன் வீரராஜு வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தந்தை வீரராஜு மகன் ஜலராஜூ […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு… தொடர்ந்து உட்கட்டம்…!!!

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  9,996 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  9996 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,64.142 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் கொரோனாவால் 82 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை மெழுகால் வடித்த கணவன்… சிலையுடன் புதுமனை புகுவிழா… வைரலாகும் புகைப்படங்கள் …!!

ஆந்திர மாநிலத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், கணவன் அவரது உருவச்சிலையை மெழுகில் செய்து வடிவமைத்து புதுமனை புகுவிழாவில் இடம் பெறச் செய்துள்ள உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கோபால் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ் குப்தா. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். அதன்பின் ஸ்ரீனிவாஸ் குப்தா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி புதுமனை புகுவிழா நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டம் – பிரதமர் மோடிக்கு அழைப்பு …!!

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு வரும் 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில் மூன்று தலைநகரங்களை ஏற்படுத்த ஆந்திரா அரசு திட்டமிட்டது. இதற்காக மக்களிடம் கருத்துகள்  கேட்டு பெறப்பட்டன. அதன்படி கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினம் ஆட்சி தலைநகராகவும், அமராவதி சட்டசபை […]

Categories
தேசிய செய்திகள்

தந்தை மகள்களின் பாசப் போராட்டம்… மூன்று பேரும் ஒரேநாளில் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆந்திர மாநிலத்தில் தந்தை மற்றும் இரு மகள்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் பகுதியில் பாபு ரெட்டி என்பவர் வசித்துவருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு ஸ்வேதா (26), மற்றும் சாயி (20) என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். தனது இரு மகள்களையும் மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். அவரின் முதல் மகள் ஸ்வேதாவிற்கு திருமணமாகிய நிலையில், அவர் தனியார் கல்லூரி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கரோனா சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த கரோனா மையத்தில் இன்று (ஆக.09) அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் சிகிச்சை மையம் முழுவதும் அடர்த்தியான புகை பரவியது. இதனால் கரோனா நோயாளிகள் பீதியடைந்தனர். இருப்பினும், அப்பகுதிக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

லாக் ஆன கார் கதவுகள்… விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்…!!

ஆந்திர மாநிலத்தில் தானாக மூடிக்கொண்ட காரில் சிக்கிக்கொண்ட 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவர்களின் 3 குழந்தைகளுக்கு 6 முதல் 8 வயது வரை இருக்கும். அந்தக் குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு காருக்குள் சென்று அமர்ந்துள்ளனர். அதன் பிறகு காரின் கதவுகள் தானாகவே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டும் ஒதுக்கி வைத்த ஊர்மக்கள்…. தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு….!!

ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தம்பதிகளிடம் ஊர்மக்கள் பேசாததால்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் தர்மவரம் என்ற பகுதியில் பெனிராஜ் மற்றும் ஸ்ரீஷா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். பெனிராஜ் வெல்லம் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் அவரின் தாய் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனை தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் கொரோனா பறிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்…!!!

ஆந்திராவில் நில தகராறு காரணமாக இரு தரப்பினர் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கர்னுள் மாவட்டம் அனுமாபுரம் பகுதியில் ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பாலநாகிரெட்டியின்  ஆதரவாளர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ திக்க ரெட்டியின் ஆதரவாளர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நில பிரச்சினை தொடர்பாக இரு பிரிவினர்களுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு […]

Categories
மாநில செய்திகள்

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ 5,000 வழங்கப்படும் – ஜெகன் மோகன் அதிரடி அறிவிப்பு..!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பாதிப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் மிகத்தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

மது கிடைக்கவில்லை… சானிடைசர் குடித்த 9 பேர் பலி… மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!!

மது கிடைக்காததால் சானிடைசரை எடுத்து குடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நேற்று மதுபானக் கடைகள் பூட்டப்பட்டிருந்ததால் உள்ளூர் வாசிகளுக்கு மதுபானம் கிடைக்கவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மதுப்பிரியர்களுக்கு திடீரென ஒரு யோசனை வந்துள்ளது. “மதுபானம் கிடைக்கவில்லையென்றால் என்ன ஆல்கஹால் சானிடைசரை குடிப்போம்” என எண்ணி, கும்பலாக சேர்ந்து ஆல்கஹால் சானிடைசரை குடித்துள்ளனர். இதனால் நேற்றிரவு நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் வழங்கிய டிராக்டர்…! உண்மையில் விவசாயி ஏழையா ? – பரபரப்பு தகவல்

ஆந்திர மாநிலத்தில் நடிகரிடம் டிராக்டர் பெற்ற விவசாயின் குடும்பம் உண்மையிலேயே ஏழையான குடும்பமா என்ற சர்ச்சை எழுந்திருக்கின்றது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற பகுதியில் நாகேஸ்வரராவ் என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் டீக்கடை நடத்திக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தும் வருகிறார். மகள்கள் இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக டீக்கடை மூடப்பட்ட நிலையில் தனது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆந்திரா முழுவதும் பேரதிர்ச்சி – ஷாக் ஆன ஜெகன்மோகன் அரசு …!!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள்  இதன் தாக்குதலில் சிக்கி திணறி கொண்டிருக்கின்றன. இந்தியாவும் அந்த வரிசையில் உலக அளவில் மூன்றாவது அதிகம் தொற்று கொண்ட நாடாக இருந்து வருகிறது. ஒரு மாநிலம் கூட தப்பாமல் இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா வலுவாக நடத்தி வருகின்றது. இந்தநிலையில் இதுவரை இல்லாத அளவாக ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

கைல காசு இல்ல…. மாடுகளுக்கு பதில்….. மகள்களை வைத்து விவசாயி செய்த செயல்….. குவியும் பாராட்டு….!!

ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களை வைத்து வயலில் உழவு செய்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் தக்காளிகளை பயிர் செய்து நல்ல விளைச்சல் கொடுக்க அதை சாகுபடி செய்து விற்க சென்றுள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவரது தக்காளிகள் நல்ல விலைக்கு செல்லவில்லை. அவர் நஷ்டத்தை சந்தித்தார். இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் தக்காளியை பயிர் செய்தால் அடுத்த முறையாவது நல்ல லாபம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை ஊரடங்கு …..!!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன்பிறகு ஊரடங்கு தளர்வு அறிவித்து மத்திய அரசு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மூடப்பட்டு இருந்த வழிபட்டு தலங்கள் ஊரடங்கு தளர்வால் திறக்கப்பட்டன. திருப்பதி கோவிலும் திறந்து வழிபாடுகள் நடைபெற்றன. கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அர்ச்சகர்கள் உள்ள பலருக்கும் கொரோனா ஏற்பட்டதை அடுத்து மீண்டும் திருப்பதி கோவில் அடைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பதியில் நாளுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

செப்.5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அதிரடி அறிவிப்பு

கடந்த 5 மாதங்களாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார்கள்.கொரோனா எப்போது குறையும் ? கல்வி நிலையங்களை எப்போது திறக்கலாம் ? என்று இன்னும் உறுதிப்படுத்த படாமல் இருக்கும் நிலையில், பல மாநிலங்கள் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஆந்திர மாநிலம் பள்ளிகள் திறப்பு குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளது ஆந்திராவில் செப்டம்பர் ஐந்தாம் தேதி மீண்டும் பள்ளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

15 நாட்கள் ஊரடங்கு – 11 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது

உலக நாடுகளை வேட்டையாடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும விட்டுவைக்கவில்லை. இதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் திருப்பதி கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தடுப்பு நடவடிக்கையை ஆந்திர மாநில அரசு முன்னெடுத்து வருகின்றது. திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் போடுப்பா… “கண்டித்த குடும்பத்தினர்”… நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய இளைஞர்.. பரிதாபமாக இறந்த இளம்பெண்..!!

முக கவசம் அணிய வலியுறுத்தியவரின் மகளை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஏலமண்டலா என்பவர் தனது குடும்பத்தினருடன் சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த அன்னப்பு ரெட்டி என்பவர் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் அவரை கண்டித்து முக கவசம் அணிவதற்கு அறிவுறுத்தியுள்ளனர். சில தினங்களுக்கு பிறகு மீண்டும் ஏலமண்டல மற்றும் குடும்பத்தினர் சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது அன்னப்பு ரெட்டி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் அதிர்ச்சி…. பக்தர்கள், ஊழியர்கள் கலக்கம் …!!

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக பகதர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கும், கோவிலில் உள்ள சக ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி கோவிலில் இன்று 3599 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 91 பேருக்கு நோய் தொற்று இருப்பது கதறியப்பட்டுள்ளது. 91 பேரில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.முன்னதாக கோவிலில் தரிசனத்திற்காக […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்… நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்த சோகம்..!!

ஆந்திராவில் மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில், அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பஞ்சனி என்ற பகுதியில் பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு சென்றது.. இந்தநிலையில் மாட்டின் வாய் பகுதி கொடூரமாக கிழிந்து தொங்கிய நிலையில், இரத்தம் சொட்ட சொட்ட பரிதாபமாக திரும்பி வந்தது.. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர், இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. அந்தப் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking : ஆந்திராவில் மீண்டும் விஷவாயு கசிவு – தனியார் நிறுவன மேலாளர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் கர்னுலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்துள்ளார். நந்தியாலாவில் உள்ள எஸ்.பி.ஒய் அக்ரோ நிறுவனத்தில் அம்மோனியா டேங்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. டேங்கரில் இருந்து கசிந்த அம்மோனியம் வாயுவால் பாதிக்கப்பட்டு மேலாளர் சீனிவாசராவ் பரிதமாக உயிரிழந்துள்ளார். Andhra Pradesh: Ammonia gas leak detected at factory in the outskirts of Kurnool district's Nandyal town; one dead, says District Collector. Concerned officials and fire tenders […]

Categories
தேசிய செய்திகள்

கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்ற கார் மீது ரயில் மோதி விபத்து… ஒருவர் பலி..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் எரகுட்லா மண்டலத்தில் ஆளில்லா ரயில்வே ட்ராக்கில் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் கடப்பாவில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு ரயில் ஒன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது அந்த பகுதியில் வைகோடூரை சேர்ந்த நாகி ரெட்டி மற்றும் அவரது நண்பர் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த கார் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தண்டவாளத்தில் சிக்கி நின்றுவிட்டது. இதனிடையே வேகமாக வந்த ரயில் கார் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநிலத்திலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து… கொரோனா தாக்கத்தால் அரசு முடிவு…!!

ஆந்திர மாநிலத்தில் 10ம் வகுப்புதேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாகி ஆந்திராவில் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். தேர்வின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுகின்றனர்.

Categories
அரசியல்

ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்!!

ஆட்டோ, கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு அரசு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஆந்திராவை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுனருக்கு நிவாரணம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்டோ மற்றும் கால் டாக்சி உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.10,000 திட்டத்தை பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்டமாக அமலில் உள்ளது. இந்த சமயத்தில் சிறு, […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு செல்ல என்னென்ன கட்டுப்பாடு ?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் மக்களுக்கு அனுமதி ….! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களை தரிசிக்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பொது முடக்கத்தால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்த நிலையில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திருப்பதி கோவிலில்  பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல்  பிரசாதங்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தன. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“உடனடியா ஆலையை மூடுங்க”… விஷவாயுவால் உயிரிழந்தோரின் உடல்களை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!!

விஷவாயு கசிந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை தனியார் ஆலைக்கு முன்பு வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென ஸ்ட்ரைன் வாயுக்கசிவு ஏற்பட்டது. விஷவாயு கசிவால் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

12 பேரை கொன்னுட்டீங்க…! ”ஒழுங்கா 50 கோடி கொடுங்க” சாட்டையடி உத்தரவு …!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக  தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட இதனால் ஆலையை சுற்றியுள்ள 10 கிராமங்களில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

விஷவாயு கசிவு விவகாரம்: உரிய விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஷவாயு கசிவு ஏற்பட்ட தனியார் நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை விவகாரத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களை தாக்கிய கொடிய விஷவாயு: நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

விஷவாயு காரணமாக பலர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் பழனிசாமி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது… ராகுல் காந்தி..!

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி […]

Categories
தேசிய செய்திகள்

40 நாட்களுக்கு பிறகு மதுவிற்பனை… “ஒரு ஊரே கியூ-ல நிக்குது”: கேள்விக்குறியில் சமூக இடைவெளி..!

ஆந்திராவின் சித்தூரில், மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து 1000திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். மேலும் சமூக இடைவெளி என்பது சுத்தமாக கடைபிடிக்கவில்லை. நாடு முழுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதேசமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற வண்ண மாவட்டங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்படும் […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – ஆந்திரா சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா உறுதி!

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நல்லூர் கிராமம் தடை […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா… பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,177 ஆக அதிகரிப்பு!

ஆந்திரப்பிரதேசத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,892ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், அதன் தாக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ஜீரோ வட்டி கடன் திட்டம்… ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று சுய உதவிக் குழுக்களான டி.டபிள்யு.சி.ஆர்.ஏ எனப்படும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி அமைப்புகளுக்கு ஒய்.எஸ்.ஆர் ஜீரோ வட்டி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், 91 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனடைவார்கள் என மணிலா அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 8.78 லட்சம் குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,400 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ரூ.5000 நிதி உதவி: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ .5 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரென்ஸ் நடத்திய போது ஆந்திர முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கூட்டத்தில், புனித ரமலான் மாதத்தில் வீடுகளில் பிரார்த்தனை செய்யுமாறு சமூகத்தை வலியுறுத்தியதற்கான தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்…. உடலை வீசி எறிந்த கொடூரம்….. !!

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் வீசிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் நெல்லூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் லட்சுமி நாராயணன் ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை அம்பத்தூரில் இருக்கும் மின் மயானத்தில் அடக்கம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மின்மயானத்தின் ஊழியர்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததோடு அப்பகுதி மக்களும் எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தில் இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்!

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மட்டும் ஆந்திர மாநிலத்தில் 12, கர்நாடகாவில் 15 மற்றும் மத்தியபிரதேசம் இந்தூரில் 22 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி ஆகியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.16 கோடி செலவில் முக கவசம் வாங்க முடிவு – ஆந்திரா அரசு

கொரோனா பரவலை தடுக்க ரூ.16 கோடி செலவில் முக கவசம் கொள்முதல் செய்ய ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது கொரோனா  வைரஸிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அவசியமான ஒன்றாக அமையும் நிலையில் ஆந்திராவில் 16 கோடி மதிப்பில் முக கவசங்களை கொள்முதல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த கொரோனா வைரஸ் மறுஆய்வு கூட்டத்தில் இந்த முடிவினை எடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில் மூன்றாம் கட்ட கணக்கெடுப்பிற்கு பின்னர் 32349 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

1,400 கி.மீ தூரம் தனி ஆளாக சென்று ஆந்திர மாநிலத்தில் சிக்கிய மகனை மீட்ட தாய்: நெகிழவைத்த சம்பவம்!

தெலுங்கானாவை சேர்த்த 50 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் 1,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கி இருந்த தனது மகனை மீட்டு வந்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இங்கு தாயின் பாசம் கொரோனாவையே பின்னுக்கு தள்ளியது. தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரசியா பேகம். 50 வயதான இவர், ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் முகமது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு குழந்தைகள் – கொரோனா குமார், கொரோனா குமாரி

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமாரி கொரோனா குமார் என  பெயர் சூட்டியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது நாட்டை அச்சப்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களும் அதற்கு உதவி புரியும் விதமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த குறும்படம் மற்றும் பாடல் போன்றவற்றை தயார் செய்து வருகின்றனர். அவ்வகையில் ஆந்திராவில் சற்று வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

மகாரஷ்டிராவில் 47 பேர், ஆந்திராவில் 16 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு: மேலும் அதிகரிக்கும் அபாயம்!

மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 28 பேருக்கும், தானே மாவட்டத்தில் 15 பேருக்கும், அமராவதியில் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட்டில் தலா ஒருவருக்கும், புனேவில் 2 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல்2ம் தேதி அமராவதியில் 45 வயது நிரம்பிய நபர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததன் காரணம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு… எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது!

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் புதிதாக 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

எமதர்மன், சித்திரகுப்தன் வேடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆந்திர போலீஸ்: எப்படித்தான் யோசிப்பாங்களோ..!

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோன் நகரத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் எமதர்மன், சித்திரகுப்தன் வேடத்தில் வந்து விழிப்புணர்வு அளித்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உள்ளூர் கலைஞர்களை கொண்டு இதுபோன்ற நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பயப்பிலி நகர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாருதி சங்கர் என்பவர் கொரானா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குதிரையின் உடம்பில் கொரானா வைரஸ் போன்ற ஒரு படத்தினை வரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

இரு மாநிலங்களுக்கு ரூ 20,00,00,000 வழங்கிய ராமோஜி ராவ்!

கொரோனா தடுப்பு பணிக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 கோடியை ராமோஜி குழும நிறுவனத்தின் தலைவர் ராமோஜி ராவ் (ramoji rao) வழங்கினார். உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியிருக்கிறது. மேலும் அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை […]

Categories
Uncategorized

BIG BREAKING : டெல்லி நிகழ்ச்சி – ஆந்திராவில் 43பேருக்கு கொரோனா

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 12 மணி நேரத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சியில் ஆந்திரா

ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை எடுக்கப்பட்ட சோதனையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,400ஐ நெருங்கிவிட்டது. 124 பேர் இந்த நோய் […]

Categories

Tech |