ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
