Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. ரசாயன பவுடர் தூவி கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்…. ஆத்தூரில் பரபரப்பு சம்பவம்….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி சாத்தனார் தெருவில் சேகர் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை உரிமையாளர் ஆவார். இவருக்கு மங்கையர்கரசி (வயது 48) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹசீனா என்ற துணிக்கடை உரிமையாளரும், மங்கையர்க்கரசியும் நேற்று முன்தினம் ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள வங்கியில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தொகை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றுள்ளனர். இதையடுத்து பணத்தை ஒரு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆத்தூரில் நெல்லை கொள்முதல் செய்வதில் பாரபட்சம்”… விவசாயிகள் குற்றச்சாட்டு…!!!

ஆத்தூரில் உள்ள செம்பட்டியில் நெல்லை கொள்முதல் செய்வதில் பாரபட்சம் பார்ப்பதாக  விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி ஆத்தூரில் சென்ற மார்ச் மாதம் 6 ஆம் தேதி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஒரு மாதமாக நெல்களை அதிகாரிகள் கொள்முதல் செய்து வருகின்றார்கள். கொள்முதலை ஒரு சில பகுதியில் இருந்து உடனடியாகவும் மற்றவர்களிடம் தாமதிப்பதாக விவசாயிகள் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் நெல்கள் மழையில் நனைந்து முளைத்து நாற்றுக்களாக மாறும் நிலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை…. “அகற்ற கூடாது”…. எதிர்ப்பு தெரிவித்து… போராட்டம் நடத்திய மக்கள்…!!

ஆத்தூர் அருகில் அம்பேத்கார் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு பீடம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்தப் பகுதியை சேர்ந்த 25 பேர் அம்பேத்கர் சிலையை ஒரு துணியில் சுற்றி அந்த பீடத்தில் நிறுவி சிலையை திறக்க முயற்சி செய்துள்ளனர். இத்தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை…. நீதி விசாரணை நடத்தனும்…. 1 கோடி கொடுக்கனும்…. கண்டன ஆர்ப்பாட்டம்..!!

ஆத்தூர் விடுதியில் 11- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்தது குறித்து நீதி விசாரணை கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள செங்காட்டு புத்தூரை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தினேஷ். இவர் கடந்த 28- ம் தேதி அன்று ஆத்தூரில் உள்ள  ஆதி திராவிடர் நல விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில்  மாணவரின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன போராட்டம் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வருகைப் பதிவேட்டில் சாதி…. பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

சேலம், ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவியரின் வருகைப்பதிவேட்டில் ஜாதி பிரிவு இடம் பெற்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 2500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வருகை பதிவேட்டில் மாணவியர்களின் பெயர்களுக்கு அருகே அவர்களின் ஜாதியும், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு பேனாக்களை கொண்டு வேறுபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

போலீஸ் ரோந்து பணியில் போது…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கஞ்சா பறிமுதல்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கீரனூர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்றுக்கொண்டிருந்த  4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்ற 2 நபரை பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் தலைவன்வடலி வடக்கு தெருவை சேர்ந்தவர் மதன் மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. மேலும் அந்த […]

Categories
மாநில செய்திகள்

“உங்கள் வீட்டுப் பிள்ளையாக சொல்கிறேன்” ஆத்தூரில் முதல்வர் மக்களுக்கு கோரிக்கை..!!

கொரோனா வைரஸ் மீண்டும் வரத்தொடங்கியுள்ளது அனைவரும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அதிமுக மற்றும் திமுக கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆத்தூர் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து  பொதுமக்களிடம் வாக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கட்டிட வேலை செய்த பெண் …கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம் …சோகம் …!!!

சேலம்  ஆத்தூர்  அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சேலம் மாவட்டத்தின்  ஆத்தூர் தெற்கு உடையார்பாளைத்தில் உள்ள வீர முத்துமாரியப்பன் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் வாகனங்களை வாங்கி விற்பனை தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்கு  முடிவு செய்து,  பழைய வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டார். பழைய  வீட்டை இடித்து விட்டு புதிய வீட்டை  ராஜா என்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இரவில் வேட்டையாடச் சென்ற நபர்… மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சோகம்…!!!

ஆத்தூர் அருகே உறவினர்களுடன் காட்டுக்குள் இரவில் வேட்டையாடச் சென்ற நபர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள எம்ஜிஆர் நகரில் அந்தோணிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 20 வயதில் குணசேகரன் என்ற மகன் இருக்கிறார். அவர் இரவு நேரங்களில் காட்டுப் பகுதிக்குச் சென்று காட்டுப்பன்றி மற்றும் முயல் போன்றவற்றின் வேட்டையாடி வருவது வழக்கம்.இந்நிலையில் குணசேகரன் தனது உறவினர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு பைத்தூர் குடகு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராயம் விற்பனை…. சோதனையில் சிக்கிய இருவர்… மதுவிலக்கு போலீசார் அதிரடி..!!

ஆத்தூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் மணிவிழுந்தான் பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்தபகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மணிவிழுந்தான் கிராமத்திலிருந்து தலைவாசல் ஆத்தூர் செல்லும் சாலை பகுதியிலும் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, மணிவிழுந்தான் கிராமத்துக்கு வெளியே புதர் பகுதியை ஒட்டி பைக்கில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

முயல், காடை, அணில் ஆகியவற்றை வேட்டையாடிய 7 பேர் கைது!

கரூரில் வன உயிரினங்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 7 இளைஞர்களை வனத் துறையினர் கைதுசெய்துள்ளனர். கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் காந்திநகரைச் சேர்ந்தவர் தான் சந்தோஷ். இவர் தனது 7 நண்பர்களுடன் சேர்ந்து வேட்டை நாயின் உதவியுடன் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு வன விலங்குகளை வேட்டையாடச் சென்றுள்ளார். அப்போது வேட்டையில் சிக்கிய முயல், காடை, அணில் உள்ளிட்ட வன உயிரினங்களைச் சமைத்து ருசித்து சாப்பிட்டுள்ளனர். சமைத்து சாப்பிட்டது மட்டுமில்லாமல் […]

Categories

Tech |