நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் விவசாயநிலம் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாயநிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (அல்லது) அதிகபட்சமாக ரூபாய்.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் 200 நிலம் அற்ற விவசாயத் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயன் அடைவார்கள். […]
