தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் வசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக பாஜக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மாநிலம் முழுவதும் உள்ள சமூகத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் எப்படியாவது படித்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னைக்கு வருகிறார்கள். அதன்பிறகு தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் விடுதிகளில் மாணவர்கள் அடிப்படை வசதி கூட இன்றி தவித்து வருகிறார்கள். […]
