தமிழக அரசு, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி விடுதியில் தங்கிப் படிக்கும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ,2,100 லிருந்து ரூ.4,000 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாணவர்களுக்கு ரூ.1,200 லிருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தியுள்ளது. மேலும் டிப்ளமோ மாணவர்கள் விடுதியெனில் ரூ.9,500-ம், மற்றவர்களுக்கு ரூ.6,500-ம் உயர்த்தியுள்ளது. அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
