ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைத் போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் ஆதிதிராவிடர் நலஆணையகம் அதற்கு பதில் அளித்துள்ளது. அது தொடர்பாக ஆணையத்தின் அறிக்கையில் “தமிழ்நாட்டில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தும் பள்ளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்று விழுப்புரம் ஆகும். ஆதிதிராவிடர் நலத்துறையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடம் -44, இடைநிலை ஆசிரியர்/காப்பாளர் காலிப்பணியிடம்- 456 ஆகும். […]
