இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இது பெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது முதல் பல்வேறு விஷயங்களுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டை வங்கி கணக்கு, சிலிண்டர் கணக்கு,பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களில் இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் அதனை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளும் வசதி தற்போது உள்ளது. […]
