ஆண்டிப்பட்டி அருகே தேவர் ஜெயந்தி முன்னிட்டு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டதை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர். அப்போது க.விலக்கு, முத்தனம் பட்டி, ராகுகாரன்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, கரட்டுபட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக மேளதாளம், பட்டாசு வெடித்தபடி ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனால் […]
