பிச்சாட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என ஆந்திர அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பிச்சாட்டூர் அணை உள்ளது. இந்த அணை நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த தண்ணீர் ராமகிரி, சுருட்ட பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலேஸ்வரம், காரணி, மங்கலம் ஆகிய வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் […]
