ஆட்டோ டிரைவரை தாக்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் புதுக்காலனியில் ஆட்டோ டிரைவரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு பெருந்துறைரோட்டில் நின்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் சவாரி கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் திண்டல் செல்ல வேண்டும் என்று கூறியதால் மெகபூர் பாஷா தனது ஆட்டோவில் 3 பேரையும் ஏற்றி திண்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அந்த 3 பேரும் ஆட்கள் நடமாட்டம் […]
