சென்னையில் வசித்து வரும் வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணமானது மாற்றி அமைக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை போன்றவைகள் உயர்ந்து வருவதால் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். கடந்த 7 வருடங்களாக ஆட்டோ கட்டணமானது மாற்றி அமைக்கப்படாததால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த ஏப்ரல் மாதம் எரிபொருள் […]
