மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிட்டபையனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான நந்தி கேசவன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பர்கூர்- திருப்பத்தூர் சாலை மல்லபாடி அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நந்திகேசவன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நந்திகேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் […]
