ஓட்டுநர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரி பகுதியில் விக்கி (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பிய விக்கி மற்றும் அவருடைய நண்பர் சாமுவேல் ஆகியோரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். […]
