நிலத்தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று ஜீவானந்தம் தனது குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை கண்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்த பத்திரிகையாளர்கள் அவர்களை தடுத்து குடும்பத்தினரின் மேல் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் ஜீவானந்தத்தின் குடும்பத்தாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் […]
