ஆட்டோ ஓட்டுநரை கொடூரமான முறையில் கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாறையடிவிளை பகுதியில் ஷிஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி ஷிஜியும், பணம்முகம் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரும் குளப்புரம் அன்னிகரை பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அஜினையும், ஷிஜியையும் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]
