மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் லோகிதாஸ்(47). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில் கட்டுமான தொழில் செய்து வந்தவர் செல்வம் (50). உறவினர்களான லோகிதாஸும் செல்வமும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி சென்ற கார் இவர்கள் சென்ற […]
