தேனி மாவட்டத்தில் நோயாளிகளை இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்லும் ஓட்டுனரை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள சுப்பன் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவரான கார்த்திக் இந்த கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இதனையடுத்து தடுப்பூசி போட செல்பவர்களையும் இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்கிறார். குறிப்பாக அவர் ஆட்டோவில் மருத்துவத்திற்கு இலவசம் என்ற வசனத்தையும் ஒட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து கார்த்திக்கை வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் […]
