வெள்ளாட்டை திருட முயன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கலுங்குப்பட்டி கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூரணபாக்கியம் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் இவர் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து பூரண பாக்கியம் தனது வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் வெள்ளாட்டை திருடிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளார்கள். […]
