தமிழ்நாட்டை பொறுத்தவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகளால் தங்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்டவற்றை வாயால் பேசி கேட்டு பெற முடியாது. இந்நிலையில் ஆட்டிசம் குழந்தைகளுக்கு உதவும் விதமாக அரும்புமொழி என்ற புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வதுடன், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் நெருக்கமானவர்களின் குரலை தேவையான புகைப்படத்துடன் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, உணவு தேவையெனில், அரும்புமொழி செயலியில் உள்ள உணவு படத்தை […]
