நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆட்சி வரைவை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அதிமுகவும் திமுகவும் தேர்தல் அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டது. ஆனால் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் ஆட்சி வரைவை வெளியிட்டு வருகின்றது. அந்த ஆட்சி வரைவில், டென்மார்க்கை போன்று ஊழல் இல்லாத நிர்வாகம் அமைக்கப்படும் […]
