திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் முககவசம் அணியாமல் வந்த நபர்களிடம் அபராதம் வசூலித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆண்டிபட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கொத்தப்பட்டி பகுதியில் ஆட்சியர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து முககவசம் அணியாமல் வந்தவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முககவசம் அணியாமல் வந்த நபர்களிடம் அபராதம் […]
