திருவள்ளூரை தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டுமென்று ஆட்சியர் பொன்னையா, வேண்டுகோள் விடுத்துள்ளார் . திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோரை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் அவர்களுக்கு சால்வை அணிவித்து உணவு வழங்கினர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தை தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்து […]
