அடுத்தடுத்து 3 குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் அம்மச்சியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது ஒரு வயது கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் […]
